தி.மு.க. எம்.பி. கனிமொழி வெற்றியை எதிர்த்து பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை தரப்பு மனு மீதான விசாரணை அக். 14-க்கு ஒத்தி வைப்பு

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் தி.மு.க. எம்பி கனிமொழி வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த தேர்தல் வழக்கை திரும்ப பெற அனுமதி கோரி பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
x
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவை  தேர்தலில் தூத்துக்குடி  தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி வெற்றி  
பெற்றதாக அறிவிக்கப்பட்டது.  அவரது வெற்றியை எதிர்த்து அந்த தொகுதியில் பாஜக  சார்பில் போட்டியிட்ட தமிழிசை சௌந்தரராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது தமிழிசை சௌந்தரராஜன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. தாம்  தெலுங்கானா மாநில ஆளுநராக பொறுப்பேற்றுள்ளதால் தேர்தல் வழக்கை திரும்ப பெற அனுமதிக்க வேண்டும் என்று அம்மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணையை அக்டோபர் 14ம்  தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி எஸ். எம். சுப்பிரமணியம் மனு குறித்து கருத்துக்களை தெரிவிக்கும் வகையில் நோட்டீசை அரசிதழில் வெளியிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற பதிவு துறைக்கு உத்தரவிட்டார்.  இதேபோல்  கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தூத்துக்குடி தொகுதியை சேர்ந்த  சந்தானம் குமார் என்பவர் தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 14ம் தேதிக்கு 
நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்