என்எல்சியில் வடமாநில தொழிலாளர்கள் ஆதிக்கம் - உள்ளூர் இளைஞர்களின் வேலை வாய்ப்பு பறிபோனதாக புகார்

என்எல்சியில் வடமாநில தொழிலாளர்கள் ஆதிக்கம் இருப்பதால் உள்ளூர் இளைஞர்களின் வேலை வாய்ப்பு பறிபோனதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
என்எல்சியில் வடமாநில தொழிலாளர்கள் ஆதிக்கம் - உள்ளூர் இளைஞர்களின் வேலை வாய்ப்பு பறிபோனதாக புகார்
x
நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் சுரங்கங்கள் மற்றும் அனல் மின் நிலையங்களில் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இதில் பல ஊழியர்கள் ஓய்வு பெற்ற நிலையில் தற்போது ஒப்பந்ததாரர்களுக்கு என்எல்சி நிறுவனம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் இனி ஒப்பந்த தொழிலாளர்களாக வடமாநில இளைஞர்கள் மட்டுமே நியமிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் என்எல்சியில் பணி அமர்த்தப்பட்டுள்ள நிலையில் நெய்வேலி முழுக்கவே வடமாநிலத்தவர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இதனால் உள்ளூர் இளைஞர்கள் என்எல்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்