அதிமுக சார்பாக போட்டியிட விருப்பமனு - செப்.22 மற்றும் 23 தேதிகளில் தரலாம் என அறிவிப்பு
இரண்டு தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக சார்பாக விருப்பமனுக்கள் பெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக சார்பாக விருப்பமனுக்கள் பெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை 22ம் தேதி மற்றும் நாளை மறுநாள் 23ம் தேதிகளில் 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி விண்ணப்பங்களை வாங்கிக் கொள்ளலாம் எனவும் பூர்த்தி செய்த விருப்ப மனுக்களை 23ம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் வழங்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ளனர்.
Next Story