மாமல்லபுரம் கடற்கரை கோயிலுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவதை தடுக்கும் வகையில் மாமல்லபுரம் கடற்கரை கோயிலுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரம் கடற்கரை கோயிலுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
x
கடல் வழியாக தீவிரவாதிகள்  ஊடுருவதை தடுக்கும் வகையில் மாமல்லபுரம் கடற்கரை கோயிலுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வரும் 12 ஆம் தேதி மாமல்லபுரத்திற்கு சீன அதிபர் ஜின்பிங்கும், பிரதமர் நரேந்திர மோடியும் வர உள்ளனர். மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் உள்ள சிற்பங்களை கண்டுகளித்துவிட்டு அங்குள்ள புல்வெளி மைதானத்தில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளை இருவரும் கண்டுகளிக்க உள்ளனர். இதனால் தற்போது மாமல்லபுரம் கடற்கரை கோயிலுக்கு வரும் பார்வையாளர் நேரத்தை 5 மணிக்குள் முடித்து தொல்லியல் துறையினர் இக்கோயிலை போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் மாமல்லபுரம் கடற்கரை கோயிலை சுற்றி துப்பாக்கி ஏந்திய போலீசார் இரவு, பாகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சாதாரண உடை அணிந்த போலீசாரும் கடற்கரையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார்,  கடற்கரையில் சுற்றும் பார்வையாளர்களை கண்காணிக்க அங்கு மின்விளக்கு வசதியும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்