பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த முதலமைச்சர் - அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு
காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் 68 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான முடிவுற்ற வெள்ள தடுப்பு பணிகளை முதலமைச்சர் துவக்கி வைத்தார்.
காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் 68 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான முடிவுற்ற வெள்ள தடுப்பு பணிகளை முதலமைச்சர் துவக்கி வைத்தார். தொடர்ந்து, 19 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தருமபுரி, கோவை, திண்டுக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில், வட்டாட்சியர் அலுவலக மற்றும் குடியிருப்பு கட்டடங்களை திறந்து வைத்தார். கட்டுமான தொழிலாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய பெட்டகம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் வணிக மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைப்பின் அலுவலகத்தையும் திறந்து வைத்தார்.
Next Story