இந்தி திணிப்புக்கு எதிரான தங்கள் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை - ஸ்டாலின்

போராட்டம் ஒத்திவைக்கப்பட்ட விவகாரத்தில் தி.மு.க. பயந்துபோய் ஒதுங்கியது போல், திரித்துச் சொல்லப்படுவதாக குறிப்பிட்ட ஸ்டாலின், இந்தி திணிப்புக்கு எதிரான தங்கள் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இந்தி திணிப்புக்கு எதிரான தங்கள் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை - ஸ்டாலின்
x
சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, உலகிற்கு இந்தியாவின் அடையாளமாக இந்தியை முன்னிறுத்த வேண்டும் என பேசினார். தென் மாநிலங்களும், மேற்குவங்கம் உள்ளிட்ட வடமாநிலங்களும் அமித்ஷா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த விவகாரத்தில் பரபரப்பு பற்றிக்கொண்டது. கடும் எதிர்த்து தெரிவித்த தி.மு.க. தலைவர் ஸ்டாலின், இந்தி திணிப்பை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக இன்று போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், தமது கருத்து தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டதாக அமித்ஷா விளக்கம் அளித்தார். இதனிடையே, தி.மு.க. தலைவர் ஸ்டாலினை, ஆளுநர் மாளிகைக்கு அழைத்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், இந்தி திணிப்புக்கு எதிராக இன்று நடைபெறுவதாக இருந்த போராட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவித்தார். இந்தியை திணிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என விளக்கம் அளித்து, போராட்டத்தை கைவிடுமாறு ஆளுநர் கேட்டுக்கொண்டதாக ஸ்டாலின் குறிப்பிட்டார். நாட்டுக்கு ஆளுநர் தேவையில்லை என கடந்த காலத்தில் விமர்சித்தை சுட்டிக்காட்டிய அரசியல் விமர்சகர்கள், தி.மு.க. பின்வாங்கிவிட்டதாக விமர்சித்தனர். ஆனால், மத்திய அரசின் நிர்பந்தத்துக்கு பயந்து தி.மு.க. பின்வாங்கியது என்றும் அ.தி.மு.க. உள்ளிட்ட சிலகட்சிகள் விமர்சித்தன. தி.மு.க. போராட்டம் ஒத்திவைப்பு குறித்து சமூக வலைதளங்களிலும் விமர்சன கருத்துக்கள் பரவின. தி.மு.க. ஏதோ சரணடைந்தது மாதிரியும், பயந்துபோய் ஒதுங்கிக் கொண்டது மாதிரியும் திரித்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என  ஸ்டாலின் குறிப்பிட்டார். ஆளுநர் மாளிகையும் ஸ்டாலின் குறிப்பிட்ட தகவல்களை இதுவரை மறுக்கவில்லை. இந்தி மொழி விவகாரத்தில் மத்திய அரசு பின்வாங்கிவிட்டதா? ஸ்டாலின் பணிந்துவிட்டாரா? என்ற கேள்விகளுக்கு காலம்தான் பதில் சொல்லும்... 


Next Story

மேலும் செய்திகள்