வீட்டில் வேலை பார்த்த சிறுமியை கொடுமைப்படுத்தியதாக குற்றச்சாட்டு - நடிகை பானுப்பிரியா மீது வழக்குப்பதிவு

வீட்டில் வேலை பார்த்த சிறுமியை கொடுமைப்படுத்தியதாக நடிகை பானுப்பிரியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வீட்டில் வேலை பார்த்த சிறுமியை கொடுமைப்படுத்தியதாக குற்றச்சாட்டு - நடிகை பானுப்பிரியா மீது வழக்குப்பதிவு
x
நடிகை பானுப்பிரியா வீட்டில் வேலை பார்த்த சிறுமியின் தாயார் பிரபாவதி, ஆந்திர மாநிலம் சமல் கோட் காவல் நிலையத்தில்  புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் தமது மகளை நடிகை பானுப்பிரியா மற்றும் அவரது சகோதரர் கோபால் ஆகிய இருவரும் கொடுமைப்படுத்தியதாக கூறப்பட்டு இருந்தது.

இதனையடுத்து சமல்கோட் போலீசார் இரண்டு பேர் மீதும் சிறார் கொடுமைப்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால் குற்றம் சென்னையில் நடைபெற்றது என்பதால், அந்த வழக்கு பாண்டி பஜார் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது இந்த வழக்கு பாண்டி பஜார் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டதையடுத்து  இதுதொடர்பான விசாரணையை போலீசார் தொடங்கியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்