பள்ளிக்கல்வித் துறையில் அதிரடி மாற்றம் - 3 இயக்குனர்கள் திடீரென பணியிட மாற்றம்

பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரிந்து வந்த 3 இயக்குனர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பள்ளிக்கல்வித் துறையில் அதிரடி மாற்றம் - 3 இயக்குனர்கள் திடீரென பணியிட மாற்றம்
x
பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரிந்து வந்த 3  இயக்குனர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனராக பணியாற்றி வந்த ராமேஸ்வர முருகன் , பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றி வந்த இயக்குனர் கருப்பசாமி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.  பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் இயக்குனராக பணியாற்றி வந்த சேதுராம வர்மா, தொடக்கக் கல்வித் துறையின் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்தும் சட்டம் தொடர்பான விதிமுறைகள் வகுக்கப்பட்டு விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் இந்த அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

Next Story

மேலும் செய்திகள்