வேளாண்மை அபிவிருத்தி மானிய திட்டத்தின் கீழ் அறுவடை இயந்திரம் வழங்கியதில் மோசடி - வேளாண்துறை அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு

தேசிய வேளாண்மை அபிவிருத்தி மானிய திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அறுவடை இயந்திரம் வழங்கியதில் மோசடி செய்த வேளாண்துறை அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
வேளாண்மை அபிவிருத்தி மானிய திட்டத்தின் கீழ் அறுவடை இயந்திரம் வழங்கியதில் மோசடி - வேளாண்துறை அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு
x
ஆத்தூரை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த இந்த மோசடி வழக்கை , மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது, பின்னர் விசாரணை முறையாக நடக்கவில்லை என ராமகிருஷ்ணன் மீண்டும் வழக்கு தொடர்ந்ததால் , கடந்த ஜூலை மாதம் சிபிஐ அதிகாரிகள் இந்த வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது, தற்போது இந்த விவகாரத்தில் சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்