சார்பு ஆய்வாளரை கண்டித்த அமைச்சர்

சார்பு ஆய்வாளர் ஒருவரை அமைச்சர் கண்டித்தது தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது.
x
நெல்லையை சேர்ந்த கண்ணபிரான் என்பவர் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிறையில் இருந்து, ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதையடுத்து அவரும், அவரின் ஆதரவாளர்கள் 10க்கும் மேற்பட்டவர்களும் காரில் நெல்லை அருகே உள்ள சொந்த ஊருக்கு வந்துள்ளனர். 

கோவில்பட்டி அருகே, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சார்பு ஆய்வாளர் இசக்கிராஜா,   கண்ணபிரான் மற்றும் அவரின் ஆதரவாளர்களின் வாகனத்தை சோதனை செய்து, அவர்களை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்ணபிரான் தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றுள்ளனர்.  அப்போது அந்த வழியே அமைச்சர் ராஜேந்திர பாலஜி வரவே, அவரிடம் நடந்த சம்பவத்தை கண்ணபிரான் தரப்பினர் முறையிட்டுள்ளனர். 

இதையடுத்து மறியலில் ஈடுபட முயன்றவர்களை சமரசம் செய்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, சார்பு ஆய்வாளர் இசக்கி ராஜாவை கண்டித்தார். இது தொடர்பான வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்