"ஊராட்சி முதல் மாநகராட்சி வரை தேர்தல் அதிகாரிகள்" - மாநில தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அட்டவணையை, உச்ச நீதிமன்றத்தில், மாநில தேர்தல் ஆணையம் ஒப்படைத்துள்ளது.
ஊராட்சி முதல் மாநகராட்சி வரை தேர்தல் அதிகாரிகள் - மாநில தேர்தல் ஆணையம்
x
தமிழகத்தில் உள்ளாட்சி  பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்து சுமார் 3 ஆண்டுகளாகியும் இன்னும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. பல்வேறு வழக்குகளால் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு வரும் நிலையில், உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக திட்டங்களை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான தேர்தல் அட்டவணையை, மாநில தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, ஊராட்சி முதல் நகராட்சி, மாநகராட்சி அமைப்புகளில் நிர்வாக ரீதியாக தேர்தல் நடத்துவதற்கான அலுவலர்களை, அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் நியமிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  Next Story

மேலும் செய்திகள்