பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு? - அதிகாரிகளிடம் விசாரணை நடத்தக் கோரிக்கை

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பணம் தரப்படாத நிலையில், வீடு கட்டியதற்கு நன்றி தெரிவித்து கடிதம் வந்திருப்பது, கடலூர் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு? - அதிகாரிகளிடம் விசாரணை நடத்தக் கோரிக்கை
x
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர், பிரதமரின் வீட்டு வசதி திட்டத்திற்கு விண்ணப்பித்திருந்தனர். இதற்கு ஒரு ரூபாய் கூட பணம் வராதநிலையில், நன்றி தெரிவித்து கடிதம் வந்திருப்பதால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டை புகைப்படம் எடுத்து, செயலியில் அனுப்ப வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நன்றி கடிதம், தங்களுக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தியிருப்பதாக வேதனை தெரிவித்த பாதிக்கப்பட்டவர்கள், இந்த திட்டத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்திருக்கலாம் என சந்தேகத்தை எழுப்பியுள்ளனர். இந்த விவகாரத்தில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் தலையிட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என ஏமாற்றம் அடைந்த மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். 
 

Next Story

மேலும் செய்திகள்