2020ம் ஆண்டு காலண்டர் தயாரிப்பு பணி சிவகாசியில் தொடக்கம் - சிறப்பு தொகுப்பு

சிவகாசி அச்சகங்களில் 2020-ஆம் ஆண்டுக்கான காலண்டர் தயாரிப்பு பணி தற்போது தீவிரம் அடைந்துள்ளது.
x
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில்  20 பெரிய நிறுவனங்களும், 300க்கும் மேற்பட்ட துணை நிறுவனங்களும் காலண்டர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. இந்த நிறுவனங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில்  20 பெரிய நிறுவனங்களும், 300க்கும் மேற்பட்ட துணை நிறுவனங்களும் காலண்டர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. இந்த நிறுவனங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 

இங்கு தயாரிக்கப்படும் காலண்டர்கள் தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்கள், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் சிவகாசியில் உள்ள அச்சகங்களில் அடுத்த ஆண்டுக்குரிய காலண்டர் தயாரிப்பு தொடங்கும். ஆடிப்பெருக்கு அன்று வெளி மாநில மற்றும் மாவட்டங்களில் இருந்து வரும் மொத்த வியாபாரிகளுக்கு அந்த ஆண்டுக்குரிய புதிய டிசைன் காலண்டர்கள் பார்வைக்கு வழங்கப்படும்.

இதனை தொடர்ந்து வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் டிசைன்களை தேர்வு செய்து, அச்சக உரிமையாளர்கள் பிரிண்டிங் செய்யும் பணியை தொடங்கி விடுவர்.

இதன்படி, கடந்த ஆண்டுகளை விட அதிக ஆர்டர் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள காலண்டர் தயாரிப்பாளர்கள், ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாக, 7 சதவீதம் வரை விலை உயர வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.

மத்திய - மாநில அரசுகள் மானியம் வழங்கினாலும் 12 சதவீத ஜிஎஸ்டி வரியை 8 சதவீதமாக குறைத்தால் தங்களுடை காலண்டர் தொழில் மேலும் வளர்ச்சியடையும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




Next Story

மேலும் செய்திகள்