சீன அதிபர் - பிரதமர் மோடி வருகை எதிரொலி : மாமல்லபுரத்தில் சாலையோர கடைகளை அகற்ற உத்தரவு

உலக பிரசித்தி பெற்ற சர்வதேச சுற்றுலா மையமான மாமல்லபுரத்திற்கு வருகிற அகடோபர்-11-ந்தேதி சீனஅதிபர் ஜின்பிங், பிரதமர் நரேந்திரமோடி ஆகியோர் வருகை தர உள்ளனர்.
சீன அதிபர் - பிரதமர் மோடி வருகை எதிரொலி : மாமல்லபுரத்தில் சாலையோர கடைகளை அகற்ற உத்தரவு
x
உலக பிரசித்தி பெற்ற சர்வதேச சுற்றுலா மையமான மாமல்லபுரத்திற்கு வருகிற அகடோபர்-11-ந்தேதி சீனஅதிபர் ஜின்பிங், பிரதமர் நரேந்திரமோடி ஆகியோர் வருகை தர உள்ளனர். இருவரும் மாமல்லபுரம் கடற்கரை கோயில், அர்ச்சுணன் தபசு, ஐந்துரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை பார்வையிட உள்ளனர். மேலும் மாமல்லபுரம் 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கும் இருவரும் சீனா- இந்தியா இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு கையெழுத்திட உள்ளனர். இதனை முன்னிட்டு மாமல்லபுரத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். மேலும் சாலை ஓர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும் பழுதடைந்த சாலைகளை பராமரிக்கவும் நெடுஞ்சாலைத்துறையிருக்கு ஆட்சியர் பொன்னையா உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்