சேதுராஜன் உடலுடன் போராட்டம் : மின்வாரிய அலுவலகத்தில் பரபரப்பு

மின்கம்பம் முறிந்து விழுந்ததால் உயிரிழந்த சேதுராஜன் உடலை எடுத்து வந்து, சிட்லபாக்கம் துணை மின் நிலையத்தில், போராட்டம் நடைபெற்றது.
x
மின்கம்பம் முறிந்து விழுந்ததால் உயிரிழந்த சேதுராஜன் உடலை எடுத்து வந்து, சிட்லபாக்கம் துணை மின் நிலையத்தில், போராட்டம் நடைபெற்றது. இன்று பிற்பகல் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சேதுராஜனின் உறவினர்களும், பொதுமக்களும் பங்கேற்றனர். அதிகாரிகளின் அலட்சியத்தால் சேதுராஜன் உயிரிழந்ததாகவும், அது தொடர்பான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினார்கள். இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேலையூர் உதவி கமிஷ்னர் சகாதேவன் , போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார், அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதை தொடர்ந்து, ஆம்புலன்சியில் சேதுராஜன் உடலை ஏற்றிக் கொண்டு கலைந்து சென்றனர். 

Next Story

மேலும் செய்திகள்