2வது நாளாக தொடரும் கண்டெய்னர் லாரி வேலைநிறுத்தம்

கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் 2வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
2வது நாளாக தொடரும் கண்டெய்னர் லாரி வேலைநிறுத்தம்
x
கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் 2வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசின் வாகன விதிமுறை சட்டப்படி அதிக பாரம் ஏற்றப்படும் லாரிகளின் உரிமையாளர்களுக்கும், ஓட்டுநர்களுக்கும் அபராதம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இனி அதிக பாரம் ஏற்றமாட்டோம் என்றும், அதே சமயம் எங்களை கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தங்களுக்கு வாடகை தொகையை உயர்த்தி தரவும் வேலைநிறுத்தத்தின் போது, கோரிக்கை விடுத்தனர். பேச்சுவார்த்தைக்கு தண்டையார்பேட்டை தாசில்தார் அழைப்பு விடுத்த நிலையில், தாசில்தார் இதில் தலையிடுவது முறையல்ல என்று கூறி, உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தை தொடர்ந்தனர்.  


Next Story

மேலும் செய்திகள்