மதுரை: தூக்கில் தொங்கிய இளைஞர் - உடலை எரிக்க முயன்ற உறவினர்கள்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பேரையூரில் சங்கர் என்ற இளைஞர் வீட்டின் மாடியில் உள்ள வாசலுக்கு வெளியே தூக்கில் தொங்கியுள்ளார்.
மதுரை: தூக்கில் தொங்கிய இளைஞர் - உடலை எரிக்க முயன்ற உறவினர்கள்
x
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பேரையூரில் சங்கர் என்ற இளைஞர் வீட்டின் மாடியில் உள்ள வாசலுக்கு வெளியே தூக்கில் தொங்கியுள்ளார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர், உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் அவசரம் அவசரமாக சங்கரின் உடலை எரிக்க முயன்றுள்ளனர். இது அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவே, அவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த பேரையூர் போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், சங்கரின் மனைவி மற்றும் உறவினர்களிடமும் விசாரணையை தொடங்கியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்