அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் கொலை : 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வெறிச்செயல்

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன்.
அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் கொலை : 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வெறிச்செயல்
x
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். முன்னாள் அதிமுக கவுன்சிலரான இவரது மகன் மாரியப்பன். இவர் அப்பகுதியில் பாத்திரக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், மாரியப்பன் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளார். டாஸ்மாக் முன்பு நின்று கொண்டிருந்த போது அங்கு இருசக்கரவாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் மாரியப்பனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது. இதில் ரத்த வெள்ளத்தில் மாரியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த தாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த போலீசார் மாரியப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவுவதை அடுத்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்