கூண்டோடு சிக்கிய கஞ்சா விற்பனை கும்பல் - பொறி வைத்து பிடித்த போலீசார்

சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த கும்பலை போலீசார் கூண்டோடு கைது செய்துள்ளனர்.
கூண்டோடு சிக்கிய கஞ்சா விற்பனை கும்பல் - பொறி வைத்து பிடித்த போலீசார்
x
ஐ.டி. இன்ஜினியர்களை குறித்து வைத்து, விற்பனையில் ஈடுபட்டு வந்த கஞ்சா கும்பல், பள்ளி, கல்லூரி மாணவர்களையும் தங்களது வாடிக்கையாளர்களாக வைத்திருக்கும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னை காவல்ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில், ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார், மதுரை மேலூரை சேர்ந்த சிங்கராஜ் என்பவரை கைது செய்தனர். சென்னை அடையாறு பகுதியில் தனியாக அறை எடுத்து தங்கி, அவர் கஞ்சா சப்ளை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. ஆர்டர் தரும் வாடிக்கையாளர்களுக்கு, வீட்டிற்கே டெலிவரி செய்வதாகவும்,  ஆயிரத்து 400-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருப்பதாகவும், நான்கு நாள் வியாபாரத்திற்கு 50 கிலோ கஞ்சா தேவைப்படும் என்றும், சிங்கராஜ் தனது வாக்குமூலத்தில்  தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் அளித்த தகவலின் அடிப்படையில்,  சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாண்டியன், அமல்தாஸ், பிரியலட்சுமி, சூர்யா, செல்வம், துரை, வரதராஜன் ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 46 கிலோ கஞ்சா மற்றும் ஆட்டோ ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து கைதான 8 பேரையும்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவர்களை புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
========

Next Story

மேலும் செய்திகள்