பச்சிளம் குழந்தையின் உடலில் ஊசி சிக்கிய விவகாரம் - மருத்துவர்கள் மீது நடவடிக்கை கோரி போலீசில் புகார்

பச்சிளம் குழந்தையின் உடலில் ஊசி சிக்கிய விவகாரம், மருத்துவர்கள் மீது நடவடிக்கை கோரி போலீசில் பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் புகார்.
பச்சிளம் குழந்தையின் உடலில் ஊசி சிக்கிய விவகாரம் - மருத்துவர்கள் மீது நடவடிக்கை கோரி போலீசில் புகார்
x
மேட்டுப்பாளையத்தை அடுத்த ஆர்.எஸ்.ஆர்.புரத்தை சேர்ந்த பிராபகரன் என்பவரது மனைவி மலர்விழி-க்கு, கடந்த மாதம் அங்குள்ள அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.  அப்போது செவிலியர்கள் செலுத்திய தடுப்பூசியின் காரணமாக குழந்தையின் தொடை பகுதியில் பெரிய வீக்கம் ஏற்பட்டு, கடந்த 20 நாட்களாக குழந்தை அவதிபட்டு வந்துள்ளது.
குழந்தையின் தொடையில் இருந்து ஊசி முனை வெளிபட்டதை கண்டு, அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்து ஊசியை அகற்றினர். இதனை அடுத்து அலட்சியமாக ஊசி செலுத்திய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் குழந்தையின் தாய் புகார் அளித்துள்ளார். முன்னதாக இந்த விவகாரத்தில் மருத்துவ கல்வி இயக்குநர் பதிலளிக்க மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்