இருசக்கர வாகனம் மீது வேன் மோதி விபத்து - 2 பேர் உயிரிழப்பு, 2 பேர் படுகாயம்

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் சகோதரர்கள் இருவர் உயிரிழந்தனர்.
இருசக்கர வாகனம் மீது வேன் மோதி விபத்து - 2 பேர் உயிரிழப்பு, 2 பேர் படுகாயம்
x
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் சகோதரர்கள் இருவர் உயிரிழந்தனர். பெரம்பலூரை சேர்ந்த பயாஸ், ஜமீல் சகோதரர்கள் இருசக்கர வாகனம் மூலம் தஞ்சை மாவட்டத்திற்கு சென்றுள்ளனர்.  கீழப்பழுர் பகுதியில் சென்றபோது எதிரே வந்த வேன் மீது இருசக்கர வாகனம் மோதி தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் பயாஸ் மற்றும் ஜமீல் ஆகியோர் உயிரிழந்தனர். வேன் தீப்பற்றி எரிந்ததில், அதில் பயணித்த இருவர் படுகாயம் அடைந்தனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்