192 பேருக்கு கனவு ஆசிரியர் விருது : பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவிப்பு

தமிழக அரசின் கனவு ஆசிரியர் விருது பெறுவதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
192 பேருக்கு கனவு ஆசிரியர் விருது : பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவிப்பு
x
பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், கணினி, செல்போன், திரை ஒலி, ஒளி அமைப்பான், இணையதள முறை போன்ற வி்த்தியாசமான முறையில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்திய அரசு பள்ளி ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளது. மாவட்ட அளவிலான தேர்வு குழுவானது, பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு, சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து அதன் விவரங்களை புகைப்பட ஆதரங்களுடன் வரும் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் பரிந்துரை செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் சிறந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ், விருது மற்றும் 10 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தும் அரசு பள்ளி ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசின் கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்