நாமக்கல் : வாட்டர் பாட்டிலில் பூச்சி மருந்து வாசனை - பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டம்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே குப்புச்சிபாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
நாமக்கல் : வாட்டர் பாட்டிலில் பூச்சி மருந்து வாசனை - பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டம்
x
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே குப்புச்சிபாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 9 ம் வகுப்பு படிக்கும் மாணவிகள், வகுப்பறையில் உள்ள வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடித்துள்ளனர். அப்போது பூச்சிக்கொல்லி மருந்து வாசனையை உணர்ந்த மாணவிகள், அது குறித்து ஆசிரியர் ராஜேஸ்வரியிடம் கூறி உள்ளனர். அப்போது இதை பெற்றோரிடம் கூற வேண்டாம் என கூறியதாக தெரிகிறது. எனினும், மாணவிகள் அது குறித்து பெற்றோரிடம் கூறியதை தொடர்ந்து, அதிர்ச்சி அடைந்த அவர்கள் பள்ளியை முற்றுகையிட்டு, ஆசிரியர் ராஜேஸ்வரியிடம் முறையிட்டுள்ளனர் மேலும் பரமத்தி வேலூர் மோகனூர் பிரதான சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்