குழந்தையின் தொடையில் ஊசி முறிந்த விவகாரம் : ஊரக சுகாதார இயக்குநர் அறிக்கை அளிக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

தடுப்பூசி போட்ட குழந்தையின் தொடையில் ஊசி முறிந்தது குறித்து அறிக்கை அளிக்குமாறு ஊரக சுகாதாரத் துறை இயக்குநருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
குழந்தையின் தொடையில் ஊசி முறிந்த விவகாரம் : ஊரக சுகாதார இயக்குநர் அறிக்கை அளிக்க மனித உரிமைகள் ஆணையம்  உத்தரவு
x
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் எம்.எஸ்.ஆர்.புரத்தை சேர்ந்த மலர்விழி என்ற பெண்ணுக்கு, அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு, தடுப்பூசி போட்ட இடத்தில், வீக்கம் அதிகரித்ததால், அதை பரிசோதித்த மலர்விழி, ஊசியின் நுனிப்பகுதி 18 நாட்களாக தொடையில் இருப்பதை கண்டு அதை அகற்றினார். 

இது குறித்து செய்தித்தாள்களில் வெளியான செய்தியின் அடிப்படையில், மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சித்தரஞ்சன் மோகன்தாஸ், சம்பவம் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து 2 வாரங்களில் ஊரக சுகாதாரத் துறை இயக்குனர் விரிவாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு  உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்