சிதம்பரம் : காதல் விவகாரத்தில் மாணவி மீது ஆசிட் வீச்சு : மாணவர் கைது

சிதம்பரத்தில், மாணவி மீது ஆசிட் வீசிய சக மாணவரை போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம் : காதல் விவகாரத்தில் மாணவி மீது ஆசிட் வீச்சு : மாணவர் கைது
x
சிதம்பரத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தவர் சுசித்ரா, இவரும் சக மாணவர் முத்தமிழனும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் முத்தமிழன், எலி மருந்து சாப்பிட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்து சென்ற சுசித்ரா மீது கோபத்தில் ஆசிட்டை வீசியுள்ளார் முத்தமிழன். இதில் காயமடைந்த சுசித்ரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதே நேரத்தில் ஆசிட் வீசிய முத்தமிழனை அருகில் இருந்தவர்கள் சராமாரியாக தாக்கியுள்ளனர். தகவலறிந்து வந்த அண்ணாமலை நகர் போலீசார் முத்தமிழனை கைது செய்து, அவர் மீது  கொலை முயற்சி உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்