குன்றத்தூர் : வண்டி ஓட்ட கற்றுத்தரும் போது விபத்து - பெண் பலி
பதிவு : செப்டம்பர் 11, 2019, 07:20 AM
வண்டி ஓட்ட கற்றுத்தரும் போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை குன்றத்தூர் அருகே வண்டலூர் - மீஞ்சூர் வெளி வட்ட சாலையில் இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளாகி, இளம் பெண் ஒருவர் இறந்து கிடப்பதாகவும், இளைஞர் ஒருவர் மயங்கி  கிடப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு வந்த போலீசார், பெண்ணின் உடலை கைப்பற்றி, இளைஞரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து நடத்திய விசாரணையில், இறந்த பெண் அபிநயா என்பதும், காயங்களுடன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டவர் அண்ணாமலை என்பதும் தெரியவந்தது. பணிபுரிந்த இடத்தில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில், வண்டி ஒட்ட கற்றுத்தரும் போது பைக் எதிர்பாராதவிதமாகதடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் அபிநயாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானதும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிற செய்திகள்

87வயது கொரோனா நோயாளியை காப்பாற்றிய மருத்துவர்கள் - மருத்துவர்களுக்கு அதிபர் ஜின்பிங் பாராட்டு

சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 87 வயது முதியவரை காப்பாற்றியதற்காக, மருத்துவர்களை அதிபர் ஷி ஜின்பிங் வெகுவாக பாராட்டியுள்ளார்.

34 views

வருமான வரி வரம்பில் வராத குடும்பங்களுக்கு தலா ரூ.10,000 - நேரடி பணபரிமாற்றம் செய்ய காங்கிரஸ் கோரிக்கை

கொரோனா ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பிரச்சனைகளை மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் வரும் 28 ஆம் தேதி இணையதள பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

32 views

"பீதியை கிளப்பும் காங்கிரஸ் மூவர் அணியை தனிமைப்படுத்த வேண்டும்" - பா.ஜ.க. எம்.பி. பர்வேஷ் வர்மா கோரிக்கை

கொரோனா தொற்று பரவலால், நாடு தற்போது ஒரு நெருக்கடியான அவசர நிலையை சந்தித்து வருவதாக பா.ஜ.க. எம்.பி. பர்வேஷ் வர்மா தெரிவித்துள்ளார்.

53 views

வீடு திரும்பினார் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

747 views

சுமார் 1000 பேருக்கு நிவாரண உதவி - அரிசி, காய்கறி வழங்கிய முடி திருத்தும் தொழிலாளி

மதுரை மாவட்டம் மேலமடையில் முடி திருத்தும் தொழிலாளி மோகன் என்பவர் ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பவர்களுக்கு நிவாரணமாக ஆயிரம் பேருக்கு அரிசி, காய்கறி ம்ற்றும் மளிகை பொருள்களை வழங்கினார்.

9 views

கண்மாயில் குவியும் அரிய வகை பறவைகள் - ஆர்வத்துடன் கண்டு ரசிக்கும் பொதுமக்கள்

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த சூரக்குண்டு கண்மாயில் குவியும் அரிய வகை பறவைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசிக்கின்றனர்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.