நெல்லை மாவட்டம் முழுவதும் காய்ச்சல் அறிகுறியுடன் 16 பேர் அனுமதி

நெல்லை மாவட்டம் முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் 2 ஆயிரத்து 500 பேர் ஈடுபட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் முழுவதும் காய்ச்சல் அறிகுறியுடன் 16 பேர் அனுமதி
x
நெல்லை மாவட்டம் முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில், 2 ஆயிரத்து 500 பேர் ஈடுபட்டுள்ளனர். நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் சிறப்பு வார்டு 24 மணி நேரம் செயல்படும் வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள 111 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், காய்ச்சல் அறிகுறிகளோடு அனுமதிக்கப்படும் நபர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கவும், அனுமதிக்கப்படும் நபரின் வீடு அமைந்துள்ள பகுதிகளில் உடனடியாக மருத்துவ முகாம் அமைக்கவும் சுகாதாரத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, நெல்லை மாவட்டத்தில் இதுவரை 16 நபர்கள் காய்ச்சல் அறிகுறிகளோடு அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்