மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு விருது

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தூய்மை தளத்திற்கான விருது கிடைத்துள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு விருது
x
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தூய்மை தளத்திற்கான விருது கிடைத்துள்ளது. மத்திய அரசின் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ், இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன்  கோயிலை சுற்றி சிறந்த தூய்மைப் பணி மற்றும் மேம்பாட்டு பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டதற்காக சிறந்த தூய்மை தலமாக தேர்வு செய்யப்பட்டது. தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இதற்கான விருது மற்றும் சான்றிதழ்களை, மத்திய அமைச்சர் கஜேந்திர சிங்,  இணை அமைச்சர் ரத்தன்லால் கட்டாரியா ஆகியோர் வழங்கி கவுரவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்