காதலி மீது ஆசிட் வீச்சு : கல்லூரியில் பரபரப்பு
சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் மாணவி மீது சக மாணவர் ஆசிட் வீச்சு தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் மாணவி மீது சக மாணவர் ஆசிட் வீச்சு தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் குத்தாலம் அருகே கூடலூரை சேர்ந்தவர் முத்தமிழன். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் இவரும், சக மாணவி ஒருவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மாணவி வேறொரு மாணவருடன் பழகி வந்ததால், இவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட, மாணவி முத்தமிழனை விட்டு விலகியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த முத்தமிழன், மாணவி மீது ஆசிட் வீசியுள்ளார். இதை கண்ட அங்கிருந்த சக மாணவர்கள், மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்தவர்கள் தாக்கியதில் காயமடைந்த முத்தமிழனும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். முத்தமிழன் கடந்த 2 தினங்களுக்கு முன்பே விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பெற்றிருப்பது மருத்துவமனையில் தெரிய வந்துள்ளது.
Next Story