230 தையல் ஆசிரியர் பணிக்கான தேர்வு பட்டியல் வெளியீடு

அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், இசை மற்றும் உடற்கல்வி ஆகிய நான்கு பிரிவுகளில் 1300 சிறப்பு ஆசிரியர்களை நியமனம் செய்ய கடந்த 2017 ஆம் ஆண்டு போட்டி தேர்வு நடந்தது.
230 தையல் ஆசிரியர் பணிக்கான தேர்வு பட்டியல் வெளியீடு
x
அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், இசை மற்றும் உடற்கல்வி ஆகிய நான்கு பிரிவுகளில் 1300 சிறப்பு ஆசிரியர்களை நியமனம் செய்ய கடந்த 2017 ஆம் ஆண்டு போட்டி தேர்வு நடந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் 81  இசை ஆசிரியர் பணிக்கான தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், 230 தையல் ஆசிரியர் பணிக்காக தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. www.trb.tn.nic.in என்ற ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில், ஒரு பணியிடத்திற்கு ஒருவர் வீதம் 230 பேரின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன .இதைத் தொடர்ந்து ஓரிரு நாளில் ஓவிய ஆசிரியர் பணிக்கான தேர்வு பட்டியலும், அதன் பின்னர் உடற்கல்வி ஆசிரியர் பணிக்கான தேர்வு பட்டியலும் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Next Story

மேலும் செய்திகள்