குழந்தையின் உடலில் 20 நாட்களாக இருந்த ஊசி : டாக்டர் - நர்சு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் பச்சிளம் குழந்தையின் உடலுக்குள் இருபது நாட்களாக ஊசி சிக்கி கொண்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தையின் உடலில் 20 நாட்களாக இருந்த ஊசி : டாக்டர் - நர்சு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
x
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் பச்சிளம் குழந்தையின் உடலுக்குள் இருபது நாட்களாக ஊசி சிக்கி கொண்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எம்.எஸ்.ஆர் புரம் பகுதியில் வசித்து வரும் பிரபாகரன் - மலர்விழி தம்பதியின் குழந்தைக்கு, இடது கையில் ஒரு ஊசியும், இடது கால் தொடை பகுதியில் ஒரு ஊசியும் போடப்பட்டது. ஆனால் தொடை பகுதியில் போட்ட ஊசியை அகற்றாமல் டாக்டரும் நர்சும் அலட்சியமாக நடந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட டாக்டர் மற்றும் நர்சு மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, குழந்தையின் பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்