உப வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறக்க கோரிக்கை : மறுப்பு தெரிவித்து மற்றொரு தரப்பு விவசாயிகள் கூச்சல்

கரூர் மாவட்டம் மாயனூரில் காவிரி கதவணைகள் இருந்து பிரிந்து செல்லும் கிளை வாய்க்கால்கள் வழியாக உப வாய்க்கால்களுக்கு தண்ணீர் வருவது வழக்கம்.
உப வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறக்க கோரிக்கை : மறுப்பு தெரிவித்து மற்றொரு தரப்பு விவசாயிகள் கூச்சல்
x
கரூர் மாவட்டம் மாயனூரில் காவிரி கதவணைகள் இருந்து பிரிந்து செல்லும் கிளை வாய்க்கால்கள் வழியாக உப வாய்க்கால்களுக்கு தண்ணீர் வருவது வழக்கம். இந்நிலையில்,கிருஷ்ணராயபுரம் உப வாயக்கால்களுக்கு தண்ணீர் வராததால் பழைய மதகு வழியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பான பேச்சுவார்த்தை கூட்டத்தில்  நடவடிக்கை எடுக்கப்படும் என்று  பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் பழைய மதகை திறந்தால் காட்டு வாய்க்காலுக்கு தண்ணீர் வராது என மறுப்பு தெரிவித்து காட்டு வாய்க்கால் விவசாயிகள் கூட்டத்தில் கூச்சலிட்டு வெளிநடப்பு செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்