கால்நடை தீவனங்களின் விலையை கட்டுப்படுத்த கோரிக்கை : தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆட்சியரிடம் மனு

கறவை மாடுகளுக்கு வழங்கப்படும் கால்நடை தீவனங்களின் விலையை கட்டுபடுத்த கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
கால்நடை தீவனங்களின் விலையை கட்டுப்படுத்த கோரிக்கை : தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆட்சியரிடம் மனு
x
கறவை மாடுகளுக்கு வழங்கப்படும் கால்நடை தீவனங்களின் விலையை கட்டுபடுத்த கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. சமீப காலமாக கால்நடை தீவனங்களான தவிடு, புண்ணாக்கு, பருத்தி கொட்டை உள்ளிட்டவைகளின் விலை அதிகரித்து வருகிறது. எனவே கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் கால்நடை தீவனங்களின் விலையையும் கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், அரசு இதற்கு தனி கவனம் செலுத்த, அரசுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.  

Next Story

மேலும் செய்திகள்