புதிய தேசிய கல்விக் கொள்கை : நவ. 11ல் வெளியீடு என தகவல்

புதிய தேசிய கல்விக் கொள்கையின் இறுதி வடிவத்தை நவம்பர் 11ஆம் தேதி வெளியிட மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
புதிய தேசிய கல்விக் கொள்கை : நவ. 11ல் வெளியீடு என தகவல்
x
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு, நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் போராட்டமும் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, புதிய கல்விக் கொள்கையை கொண்டு வர மத்திய அரசு முனைப்பு காட்டுகிறது. கடந்த ஐந்தாண்டுகளாக உருவாக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கை வரைவை மாநில அரசுகளுக்கு அனுப்பி மத்திய அரசு கருத்து கேட்டது. மாநில அரசுகளிடம் இருந்து வந்த பரிந்துரைகளை ஏற்கலாமா, வேண்டாமா என்பது குறித்து மத்திய அரசு குழு அமைத்து ஆய்வு செய்து வருகிறது. இருப்பினும், முழு வீச்சில் கல்விக் கொள்கை இறுதி வடிவம் தயாரிக்கும் பணி நடைபெறுகிறது. நவம்பர் மாதம் 11ஆம் தேதி புதிய கல்விக் கொள்கையின் இறுதி வடிவத்தை வெளியிட மத்திய அரசு மும்முரம் காட்டுவதாக தகவல்கள் கூறுகின்றன. 

Next Story

மேலும் செய்திகள்