பெண் அரசு ஊழியர் கிணற்றில் குதித்து தற்கொலை : உயர் அதிகாரிகளின் அழுத்தமே காரணம் என கடிதம்

உயர் அதிகாரிகள் கொடுத்த அழுத்தம் காரணமாக ராமநாதபுரத்தை சேர்ந்த பெண் அரசு ஊழியர் ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண் அரசு ஊழியர் கிணற்றில் குதித்து தற்கொலை : உயர் அதிகாரிகளின் அழுத்தமே காரணம் என கடிதம்
x
ராமநாதபுரம் காட்டூரணியை சேர்ந்தவர் ஷோபனா. இவர் அங்குள்ள போக்குவரத்து பணிமனையில் ஜூனியர் அசிஸ்டெண்டாக வேலை பார்த்து வந்தார். இவர் தனது வீட்டின் அருகே உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டது. பணி செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகள் கொடுத்த அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக அவர் கடிதம் எழுதி வைத்துள்ளார். மேலும் அவர்கள் 3 பேர் மீதும் துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்