ரயிலில் கஞ்சாவை கடத்திய பெண்கள் உட்பட 4 பேர் கைது

ரயிலில் கஞ்சாவை கடத்தி வந்து அதை தேனி மாவட்டத்துக்கு கொண்டு செல்ல முயன்ற பெண்கள் உட்பட 4 பேரை சென்னையில் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
ரயிலில் கஞ்சாவை கடத்திய பெண்கள் உட்பட 4 பேர் கைது
x
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு நேற்றிரவு ரயில் ஒன்றில் தேனியை சேர்ந்த கணேசன் என்பவர் வந்துள்ளார். அவரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் குற்றப்பிரிவு நுண்ணறிவு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் இருந்த உடைமைகளை சோதனை செய்த போது 44 கிலோ எடை கொண்ட கஞ்சா இருப்பது தெரியவந்தது.

தேனி மாவட்டத்தை சேர்ந்த பாத்திமா சலீம், சசிகலா, பாண்டீஸ்வரி ஆகிய 3  பெண்கள், இந்த கஞ்சா பொட்டலங்களை, ரயிலில் கணேசனுக்கு கொடுத்ததும் தெரியவந்தது. சென்னையில் இருந்து இந்த கஞ்சா பொட்டலங்களை தேனி மாவட்டத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்யவும் அவர்கள் திட்டமிட்டதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து 3 பெண்கள் உட்பட 4 பேரை எழும்பூர் ரயில் நிலையத்தில் கைது செய்த போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் கணேசன் மீது  ஆந்திரா மற்றும் தேனி மாவட்டத்தில் பல்வேறு கஞ்சா வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்