கல்லணையில் இருந்து 32,000 கனஅடி நீர் திறப்பு...

கல்லணையில் இருந்து 32 ஆயிரத்து 98 கனஅடி நீர் திறக்கப்படுவதால், பாதுகாப்பாக இருக்குமாறு பொது மக்களுக்கு தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.
கல்லணையில் இருந்து 32,000 கனஅடி நீர் திறப்பு...
x
கல்லணையில் இருந்து 32 ஆயிரத்து 98 கனஅடி நீர் திறக்கப்படுவதால், பாதுகாப்பாக இருக்குமாறு பொது மக்களுக்கு தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.

மேட்டூரில் இருந்து அதிக நீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து, தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து 32 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. காவேரியில் ஒன்பதாயிரத்து 29 கனஅடியும், வெண்ணாற்று பாசனத்துக்கு ஒன்பதாயிரத்து 17 கனஅடியும் திறக்கப்படுகிறது. கல்லணை கால்வாய் பாசனத்துக்கு மூவாயிரம் கனஅடி நீரும் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் மூலம், தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் நெல் பயிரிடும் பணிகளில் விவசாயிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். அதிகமான நீர்வரத்தை தொடர்ந்து, 11 ஆயிரம் கனஅடி நீர் கொள்ளிடத்தில் உபரியாக திறக்கப்பட்டுள்ளது. இது, கீழணை மூலம், வீராணம் ஏரிக்கு கொண்டு செல்லப்படும். இதைத் தொடர்ந்து, கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி, தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்