நீலகிரி : குந்தா அணை திறப்பு - தண்ணீர் வெளியேற்றம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் உள்ள குந்தா அணை திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
நீலகிரி : குந்தா அணை திறப்பு - தண்ணீர் வெளியேற்றம்
x
நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் உள்ள குந்தா அணை திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீலகிரியில் உள்ள மஞ்சூா், அப்பா்பவானி ஆகிய பகுதிகளில் கடந்த 3 தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் 171 அடி உயரம் கொண்ட அவலாஞ்சி அணைக்கு  நீா்வரத்து அதிகரித்துள்ளது. அவலாஞ்சி அணை திறக்கப்பட்டால் தண்ணீ குந்தா அணைக்கு வந்து சேரும். இந்நிலையில் ஏற்கனவே குந்தா அணை முழு கொள்ளளவை எட்டியதால், ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவின் பேரில் குந்தா அணை திறக்கப்பட்டது. அணையின் பாதுகாப்பு கருதி திறக்கப்பட்ட குந்தா அணையில் இருந்து வினாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்