மதுரை : போலீசை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடிகள் - துப்பாக்கிச் சூடு நடத்தி கைது செய்த போலீசார்

மதுரையில், ரவுடிகளை நோக்கி போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை : போலீசை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடிகள் - துப்பாக்கிச் சூடு நடத்தி கைது செய்த போலீசார்
x
மதுரை தெப்பகுளம் பகுதியில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் நின்றுகொண்டிருந்த  ஆட்டோவை மடக்கி விசாரணை நடத்தியபோது, ஆட்டோவில் இருந்த மணிகண்டன் என்ற நபர் திடீரென, தான் வைத்திருந்த ஆயுதத்தால் காவல்துறை சார்பு ஆய்வாளரை தாக்கி உள்ளார். அதனை தொடர்ந்து ஆட்டோவில் இருந்த கும்பல் தப்பியோடி உள்ளது. இதையடுத்து போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பியோட முயன்ற அதே தெருவை சேர்ந்த மணிகண்டன், சிவபிரகாஷ், கார்த்திக் ,ரமேஷ், ராஜகணேஷ் ஆகிய 5 பேரை கைது செய்தனர். தப்பியோடிய மணிகண்டனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக ரவுடிகள் சிலர் கப்பலூர் சுங்கச்சாவடியில் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது போலீசார் மீது தாக்குதல் நடத்திய ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்