கும்பகோணம் : பெருக்கெடுக்கும் காவிரி நீர் - குளங்களில் தண்ணீர் நிரப்ப கோரிக்கை

காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து வரும் நிலையில், கும்பகோணம் நகரில் உள்ள பெரும்பாலான குளங்களை நிரப்ப பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கும்பகோணம் : பெருக்கெடுக்கும் காவிரி நீர் - குளங்களில் தண்ணீர் நிரப்ப கோரிக்கை
x
காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து வரும் நிலையில், கும்பகோணம் நகரில் உள்ள பெரும்பாலான குளங்களை நிரப்ப பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 அடியை எட்டிய நிலையில் காவிரியில் கூடுதல் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் திறந்து விடப்படும் நீரை, கும்பகோணம் நகரில் உள்ள 17 குளங்களில் நிரப்ப வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கும்பகோணம் பச்சையப்பன் தெருவில் உள்ள பழமையான குளத்தில் இரண்டரை கோடி ரூபாய் மதிப்பில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை விரைந்து முடித்து, நீரை அதில் நிரப்பவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்