இரவு காவல் ரோந்து பணியில் கல்லூரி மாணவர்கள் : காவல்துறையுடன் நல்லுறவை ஏற்படுத்த புதிய அணுகுமுறை

காவல்துறையினருடன் நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக ரோந்துபணி மற்றும் வாகன சோதனைகளுக்கு கல்லூரி மாணவர்களை ஈடுபடுத்துவது சென்னையில் வரவேற்பை பெற்றுள்ளது.
இரவு காவல் ரோந்து பணியில் கல்லூரி மாணவர்கள் : காவல்துறையுடன் நல்லுறவை ஏற்படுத்த புதிய அணுகுமுறை
x
சென்னை, லயோலா கல்லூரியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 30 மாணவர்களுக்கு, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் காவல்துறை உயரதிகாரிகள் முதலில் பாதுகாப்பு ஆலோசனைகளை வழங்கினர். மாணவர்கள் வெள்ளை சட்டையும், காக்கி நிற பேண்ட் மற்றும் தொப்பி அணிந்திருந்தனர்.அவர்கள் குழுக்களாக பிரித்து சூளைமேடு, ஆயிரம்விளக்கு, நுங்கம்பாக்கம் போன்ற பகுதிகளில் வாகன சோதனை, ரோந்துப்பணி, போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். சென்னை போன்ற மாநகரகளில் இரவு நேர பாதுகாப்பு பணிகளுக்கு மாணவர்கள் இதற்கு முன்பே ஈடுபடுத்த பட்டனர். ஆனால் நாட்பொழுதில் அத்திட்டம் செயல் இழந்தது. இந்நிலையில் மீண்டும் போலீசாருடன் இணைந்து கல்லூரி மாணவர்கள் சேவை அடிப்படையில் இரவு நேர காவல் பணிகளில் ஈடுபடுவது பொதுமக்களுக்கு பயன் அளிப்பதாக  போலீசார் கூறினர்.

Next Story

மேலும் செய்திகள்