அரக்கோணம் தொகுதி வாக்காளர்களுக்கு ஜெகத்ரட்சகன் நன்றி

அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் கிராமம் கிராமமாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அரக்கோணம் தொகுதி வாக்காளர்களுக்கு ஜெகத்ரட்சகன் நன்றி
x
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெகத்ரட்சகன் திருத்தணி தொகுதிக்குட்பட்ட பொன்பாடி, மேட்டுக் காலனி,  தும்பிகுளம், தாழவேடு, நெமிலி, உள்ளிட்ட கிரமங்களில் வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். மத்தூர் கிராமத்தில் குடிநீர் பிரச்சினை இருப்பதாகவும் அதனை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து மத்தூர் பகுதியில் குடிநீர் போர்வெல் அமைக்க ஒரு லட்சம் ரூபாயை தனது சொந்த நிதியிலிருந்து பொது மக்களிடம் அவர் வழங்கினார். சாலை, குடிநீர், வீட்டுமனைப்பட்டா, உள்ளிட்ட கோரிக்கை தொடர்பாக அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜெகத்ரட்சன் உறுதியளித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்