கற்பு குறித்த திருமாவளவன் கருத்தால் விவாதம்

கற்பு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ள கருத்து விவாத பொருளாக மாறியுள்ளது.
x
சென்னை மயிலாப்பூரில நடந்த நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய திருமாவளவன்,  கற்பு என்பதன் பொருள் உறுதியாக இருத்தல் என்று தெரிவித்துள்ளார். கற்பு என்ற ஒற்றை வார்த்தை ஆணாதிக்கத்திற்கு பயன்படுத்தப் படுவதாகவும் அவர் குறை கூறியுள்ளார்.

நாகரீகம் எப்போது தோன்றியது என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், அது குறித்து பல வினாக்களை தொடுத்துள்ளார்.  கற்பு என்பது கால போக்கில் மக்களாக உருவாக்கி கொண்டதுதான் என்றும் திருமாவளவன் விவரித்துள்ளார்.

இதனிடையே, கற்பு என்ற சொல் குறித்து சட்டத்தில் எதுவும் குறிப்பிடப் படவில்லை என்றும் அவ்வப்போது நீதிமன்றங்களால், வழக்குக்கேற்ப புதிய  புதிய விளக்கங்கள் தரப்படுகின்றன என்றும் வழக்கறிஞர் தமிழ்மணி தெரிவித்துள்ளார்.

திருமாவளவனின் இந்த கருத்து விவாத பொருளாகி உள்ள நிலையில், கற்பு குறித்து சங்க இலக்கியங்களிலும் , நவீன இலக்கியங்களிலும், தெரிவித்துள்ள கருத்துகளை பார்ப்போம். 

கற்பு எனப்படுவது சொல் திறம்பாமை என்று  கொன்றைவேந்தனில் அவ்வையார் விளக்கம் அளித்துள்ளார். அதாவது சொன்ன சொல் மாறாமல் இருப்பது தான் கற்பு என்றும் , அது உடல் சம்மந்தப்பட்ட விஷயம் அல்ல என்றும் அவ்வையார் கூறியுள்ளார். 

கற்பு விஷயத்தில் பாரதியாரின் கருத்து முற்றிலும் மாறுபட்டது. பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்த பாரதியார், கற்பு நிலை என்று சொல்ல வந்தார் இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம் என்று கூறியுள்ளார் 

இன்றும் கற்பு என்ற சொல் தமிழ் இலக்கிய மேடைகளில் விவாத பொருளாகவே இருந்து வருகிறது
 
Next Story

மேலும் செய்திகள்