கன்னியாகுமரி : ஆற்றில் குளிக்க சென்ற ஐ.டி. ஊழியர் மாயம்

கன்னியாகுமரி அருகே ஆற்றில் குளிக்க சென்ற ஐடி ஊழியர் வெள்ளத்தில் சிக்கி மாயமானதை தொடர்ந்து அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரி : ஆற்றில் குளிக்க சென்ற ஐ.டி. ஊழியர் மாயம்
x
கன்னியாகுமரி அருகே ஆற்றில் குளிக்க சென்ற ஐடி ஊழியர் வெள்ளத்தில் சிக்கி மாயமானதை தொடர்ந்து அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. சஜித் என்ற 23 வயது இளைஞர் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சொந்த ஊருக்கு வந்த அவர், தக்கலையில் உள்ள வள்ளியாற்றில் குளிக்க சென்றுள்ளார். சஜித் மீண்டும் திரும்பி வராததால் சந்தேகமடைந்த அவரின் தாய், போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் சஜித் வெள்ளத்தில் சிக்கியது தெரியவந்தது. இதையடுத்து அவரை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்