வாட்ஸ் அப் குழு மூலம் நொடிந்த நிலையில் உள்ள காவலர் குடும்பங்களுக்கு நிதி உதவி - நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சக காவலர்களின் மனிதநேயம்

நொடிந்த நிலையில் உள்ள காவலர் குடும்பங்களுக்கு சக காவலர்களே நிதி திரட்டி உதவிய சம்பவம் கடலூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாட்ஸ் அப் குழு மூலம் நொடிந்த நிலையில் உள்ள காவலர் குடும்பங்களுக்கு நிதி உதவி - நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சக காவலர்களின் மனிதநேயம்
x
கடலூர் மாவட்ட காவலர் பயிற்சி கல்லூரியில் 2003 ஆம் ஆண்டில் பயிற்சி முடித்த 182 காவலர்கள் தற்போது பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வருகின்றனர்.   வாட்ஸ்அப் குழு மூலம் தொடர்பில் உள்ள அவர்கள், தங்களுடன் பயிற்சி முடித்த இரண்டு காவலர்கள் இறந்ததால், அவர்களின் குடும்பத்துக்கு நிதி உதவி செய்ய முடிவு செய்தனர். அதற்காக வாட்ஸ் அப் குழு மூலம் திரட்டப்பட்ட, சுமார் 4 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் நிதி உதவியை, கடலூர் மாவட்ட
காவல் கண்காணிப்பாளர் அபிநவ் மூலம், பாதிக்கப்பட்ட காவலர் குடும்பத்தினருக்கு வழங்கினர். நலிவடைந்த காவலர் குடும்பங்களுக்கு சக காவலர்களே நிதி திரட்டி அளித்த சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Next Story

மேலும் செய்திகள்