ராணுவ பயிற்சி முடித்தவர்களுக்கு பயிற்சி நிறைவு விழா - ராணுவ அதிகாரிகள் பயிற்சி பெற்றவர்களின் குடும்பத்தினர் பங்கேற்பு

சென்னை அடுத்த பரங்கிமலை ராணுவ பயிற்சி மையத்தில் ராணுவ அதிகாரி பயிற்சி முடித்தவர்களுக்கான பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.
ராணுவ பயிற்சி முடித்தவர்களுக்கு பயிற்சி நிறைவு விழா - ராணுவ அதிகாரிகள் பயிற்சி பெற்றவர்களின் குடும்பத்தினர் பங்கேற்பு
x
2019 ஆம் ஆண்டு ராணுவ அதிகாரிகளுக்கான போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்ற 183 ஆண்கள் மற்றும் 30 பெண்கள் உள்பட அனைவருக்கும் சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி மையத்தில் கடந்த ஆறு மாதங்களாக பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியின் நிறைவாக ராணுவ அதிகாரிகளை வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு ராணுவ அதிகாரிகள்,  பயிற்சி பெற்றவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டு பயிற்சி முடித்தவர்களை வழி அனுப்பி வைத்தனர். இதில் தென்னக ராணுவ தலைமை அதிகாரி சன்டினர் குமார் சைனி கலந்துகொண்டு பயிற்சி பெற்ற ராணுவ வீரர்களை வழியனுப்பி வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்