துபாய் செல்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்காவில் இருந்து இன்று துபாய் செல்கிறார்.
துபாய் செல்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
x
இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் என 3 நாடுகள் பயணமாக கடந்த 28ம் தேதியன்று முதலமைச்சர் பழனிசாமி புறப்பட்டுச் சென்றார். முதலில் இங்கிலாந்து பயணத்தை முடித்த அவர், அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ, நியுயார்க் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பயணம் மேற்கொண்டார். அப்போது பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பயணம் மேற்கொண்ட அவர், அங்குள்ள கழிவு நீரை மறு சுழற்சி நிறுவனத்தை பார்வையிட்டார். வீடுகளில் வெளியேறும் கழிவு நீரை சுத்தமாக்கி மீண்டும் வீடுகளுக்கு அனுப்பும் முறையை, அவருக்கு அதிகாரிகள் விளக்கி கூறினார்கள்.இதையடுத்து, அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கிருந்து இன்று துபாய் புறப்படுகிறார். துபாயில் 2 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் அவர், அங்கு தொழிலதிபர்களை சந்திக்கிறார். அதைத் தொடர்ந்து, 9ம் தேதி இரவு துபாயில் இருந்து சென்னைக்கு புறப்படுகிறார். இரண்டு வார கால பயணத்துக்கு பிறகு, 10ம் தேதியன்று சென்னைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திரும்புகிறார்.

Next Story

மேலும் செய்திகள்