குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு

நெல்லை மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு
x
நெல்லை மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. குற்றாலம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், நேற்றிரவு அங்கு கனமழை கொட்டித்தீர்த்தது. இந்நிலையில் இன்று காலை குற்றாலம் மெயின் அருவியில் தீடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனை அடுத்து அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.  வெள்ளப்பெருக்கு குறைந்ததும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்