பிலிகுண்டுலுவுக்கு விநாடிக்கு 29,000 கனஅடி நீர்வரத்து

கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட கூடுதல் நீர், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது.
பிலிகுண்டுலுவுக்கு விநாடிக்கு 29,000 கனஅடி நீர்வரத்து
x
கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட கூடுதல் நீர், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. தற்போதைய நிலவரப்படி வினாடிக்கு 29 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. நீர்வரத்து மேலும் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளப்பெருக்கு காரணமாக, ஒகேனக்கல் அருவி மற்றும் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை 29-வது நாளாக நீட்டிக்கிறது. கோத்திக்கல் பாறை பகுதியிலும் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்