பணி மூப்பு பட்டியல் தயாரிப்பு விதிகளில் திருத்தம் : வருவாய் துறை செயலருக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவு

வருவாய் துறை உதவியாளர்கள் பதவி உயர்வு தொடர்பான பணி மூப்பு பட்டியல் தயாரிப்பு விதிகளில் திருத்தங்களை மேற்கொண்டு 2 மாதத்திற்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க வருவாய் துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
பணி மூப்பு பட்டியல் தயாரிப்பு விதிகளில் திருத்தம் : வருவாய் துறை செயலருக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவு
x
வருவாய் துறை உதவியாளர்கள்  பதவி உயர்வு தொடர்பான பணி மூப்பு பட்டியல் தயாரிப்பு  விதிகளில் திருத்தங்களை மேற்கொண்டு 2 மாதத்திற்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க வருவாய் துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. வருவாய் துறையில் உதவியாளராக பணியாற்றுவோருக்கு துணை தாசில்தார் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு சேர்த்து மொத்தமாக பதவி உயர்வு வழங்கப்படுவதால் பலருக்கு போதிய பணிமூப்பு இருந்தும் பதவி உயர்வு கிடைக்காத நிலை ஏற்படுகிறது. இதனால் பணிமூப்பு பட்டியல் தயாரிப்பதில் திருத்தங்கள் மேற்கொள்ள உத்தரவிடகோரி பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை  விசாரித்த நீதிபதிகள் உரிய உத்தரவு பிறப்பிக்க வருவாய்துறை செயலருக்கு உத்தரவிட்டனர்.
 

Next Story

மேலும் செய்திகள்